களை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

களை1களை2களை3களை4களை5களை6

களை1

வினைச்சொல்களைய, களைந்து, களைக்க, களைத்து

 • 1

  (பயனற்ற செடி, புல் முதலியவற்றை) பிடுங்கி அகற்றுதல்; நீக்குதல்.

  ‘விளையாட்டு மைதானத்தில் முளைத்திருந்த முட்செடிகளை மாணவர்கள் வெட்டிக் களைந்தனர்’

 • 2

  (அரிசி, கேழ்வரகு முதலியவற்றை நீரில் போட்டு அதில் உள்ள கற்கள், துரும்பு போன்றவற்றை) பிரித்தெடுத்தல்.

 • 3

  (ஆடையை உடலிலிருந்து கழற்றி, உருவி) நீக்குதல்.

  ‘வீட்டுக்கு வந்தவுடன் வேர்வையால் நனைந்திருந்த உடைகளைக் களைந்துவிட்டுக் குளிக்கச் சென்றார்’

 • 4

  (குறைபாடு, சந்தேகம் முதலியவற்றை) நீக்குதல்; போக்குதல்.

  ‘மக்கள் தெரிவித்த குறைகள் களையப்படும் என்று அந்த மேலதிகாரி உறுதியளித்தார்’

களை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

களை1களை2களை3களை4களை5களை6

களை2

வினைச்சொல்களைய, களைந்து, களைக்க, களைத்து

 • 1

  (வேலை செய்து) சோர்வடைதல்.

  ‘அலுவலகத்திலிருந்து களைத்துப்போய் வந்திருக்கிறாய்’
  ‘ஒரு மைல்கூட நடக்கவில்லை, அதற்குள் களைத்துவிட்டாயே!’

களை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

களை1களை2களை3களை4களை5களை6

களை3

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (பயிர் வளர்வதற்குத் தடையாக இருக்கும்) புல், பூண்டு, சிறு செடி முதலியன.

  ‘பயிர்களுக்குப் போக வேண்டிய சத்துகளைக் களைகள் எடுத்துக்கொள்கின்றன’

களை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

களை1களை2களை3களை4களை5களை6

களை4

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (முகத்தில் காணப்படும்) பொலிவு.

  ‘என்ன களையான முகம்!’

 • 2

  (ஓர் இடத்தில் காணப்படும்) கலகலப்பு.

  ‘வீடு களை இழந்து காணப்பட்டது’

 • 3

  (முகத்தில்) குறிப்பிட்ட தன்மையைக் காட்டும் வெளிப்பாடு.

  ‘எல்லோருடைய முகத்திலும் ஏன் இந்த அசட்டுக் களை?’
  ‘புத்திசாலிக் களை’

களை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

களை1களை2களை3களை4களை5களை6

களை5

பெயர்ச்சொல்-ஆன

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  ஒரு தாளத்தில் இருக்கும் அட்சரங்களின் எண்ணிக்கை.

களை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

களை1களை2களை3களை4களை5களை6

களை6

பெயர்ச்சொல்-ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு களைப்பு.

  ‘ஓடுவதும் பிறகு களை வந்தால் நடப்பதுமாய்ப் போய்க்கொண்டிருந்தான்’