தமிழ் கீழ்ப்படி யின் அர்த்தம்

கீழ்ப்படி

வினைச்சொல்-படிய, -படிந்து

  • 1

    (ஆணை, உத்தரவு முதலியவற்றுக்கு) பணிதல்.

    ‘கட்சிக் கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்து தொண்டர்கள் செயல்பட வேண்டும்’
    ‘அரசு அதிகாரியாகவே இருந்தாலும் நீதிமன்றத்தின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது’