தமிழ் கழற்று யின் அர்த்தம்

கழற்று

வினைச்சொல்கழற்ற, கழற்றி

 • 1

  (செருகப்பட்டிருக்கும் அல்லது திருகப்பட்டிருக்கும் ஒன்றை) பிரித்துத் தனியாக எடுத்தல்; நீக்குதல்.

  ‘கடிகாரத்தைப் பழுதுபார்க்க அக்கக்காகக் கழற்றினால்தான் முடியுமா?’
  ‘இந்த மேஜைக் கால்களைத் தனித்தனியாகக் கழற்றி மீண்டும் சேர்த்துவிடலாம்’

 • 2

  (உடம்பில் அணிந்திருப்பதை) நீக்குதல்.

  ‘சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினான்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (உடல் உறுப்பை அறுவைச் சிகிச்சையின் மூலம்) நீக்குதல்.

  ‘சர்க்கரை வியாதி காரணமாக அவர் காலைக் கழற்றிவிட்டார்கள்’
  ‘உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் அவர் வலது கால் கழற்றப்பட்டுவிட்டது’