கழல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கழல்1கழல்2

கழல்1

வினைச்சொல்கழல, கழன்று

  • 1

    (செருகப்பட்டிருப்பது, திருகப்பட்டிருப்பது, நகையாக அணியப்பட்டிருப்பது) தனியாக வருதல்; உருவி அல்லது நெகிழ்ந்து நீங்குதல்.

    ‘கதவுப்பிடி கழன்று கையோடு வந்துவிட்டது’
    உரு வழக்கு ‘அந்தக் கிழவரிடமிருந்து எப்படிக் கழன்றுகொள்வது என்று யோசித்தான்’

கழல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கழல்1கழல்2

கழல்2

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் அரசர்களும் வீரர்களும் காலில் அணிந்திருந்த) குழல் வடிவக் கால் வளையம்; தண்டை.