தமிழ் கழிவு யின் அர்த்தம்

கழிவு

பெயர்ச்சொல்

 • 1

  (தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய) குப்பைகூளம்; (தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட பின் சேரும் அல்லது வெளியேற்றப்படும்) ரசாயனக் கலப்புடைய பொருள்.

  ‘பெருநகரங்களில் சேரும் கழிவுப் பொருள்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்’
  ‘தொழிற்சாலையின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் மீன் வளம் குறைகிறது’
  ‘திடக் கழிவு’

 • 2

  மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆசனவாய் வழியாக வெளியேறுவது.

  ‘விலங்குக் கழிவுகள் வயலுக்கு நல்ல உரமாகப் பயன்படுகின்றன’

 • 3

  தரத்தில் குறைந்தது என்று நீக்கப்பட்டது.

  ‘கழிவுப் புகையிலை’
  ‘வெற்றிலைக் கழிவுகளை வாங்கிவந்து விற்கிறார்’

 • 4

  உரமாகப் பயன்படும், கழிக்கப்பட்ட இயற்கைப் பொருள்.

  ‘ரசாயன உரங்களின் வருகையால் இயற்கைக் கழிவுகள் வீணாக்கப்படுகின்றன’
  ‘விவசாயக் கழிவுகள்’

 • 5

  (ஏலச்சீட்டு முதலியவற்றில் அளிக்கப்படும்) தள்ளுபடி.

  ‘ஏலக் கழிவு போகக் கட்ட வேண்டிய பணம் எவ்வளவு?’

 • 6

  (விற்கும்போது பொருள்களுக்கு அளிக்கப்படும்) விலைக் குறைப்பு; தள்ளுபடி.

  ‘இந்தச் சேலை கழிவு போக இருநூறு ரூபாய்தான்’