தமிழ் கழுத்தறு யின் அர்த்தம்

கழுத்தறு

வினைச்சொல்-அறுக்க, -அறுத்து

 • 1

  (ஒருவரைச் சிறுசிறு காரியங்களுக்காக) தொல்லைக்கு உள்ளாக்குதல்.

  ‘அவன் நினைத்தபோதெல்லாம் வீட்டுக்கு வந்து எதையாவது கேட்டுக் கழுத்தறுப்பான்’

 • 2

  (நம்பியிருந்த ஒருவர் அல்லது ஒன்று மிக முக்கியமான சமயத்தில்) கைவிடுதல்.

  ‘இப்படிக் கழுத்தறுப்பான் என்று தெரிந்திருந்தால் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டேன்’
  ‘பேருந்து பாதி வழியில் நின்று கழுத்தறுத்துவிட்டது’