தமிழ் கழுத்து யின் அர்த்தம்

கழுத்து

பெயர்ச்சொல்

 • 1

  உடலோடு தலைப்பகுதி இணைகிற இடம்.

 • 2

  குரல்வளை; கண்டம்.

  ‘கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்’

 • 3

  (குடம் போன்றவற்றில்) வாயை ஒட்டி அமைந்திருக்கும், சற்றுக் குறுகலான பகுதி/(சட்டை, ரவிக்கை போன்றவற்றில்) கழுத்தில் தங்கும் பகுதி.