வினையடை
- 1
தரையில்; நிலத்தில்.
‘மரத்திலிருந்து கீழே இறங்கு!’‘கட்டிலில் படு, கீழே படுக்காதே!’‘இருபதாவது மாடியிலிருந்து பார்த்தால் கீழே செல்லும் வாகனங்கள் சிறு புள்ளிகளாகத் தெரியும்’ - 2
(குறிப்பிட்ட அளவு, எண்ணிக்கை முதலியவற்றுக்கு) குறைவாக.
‘குளிர் காலத்தில் வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிடக் கீழே செல்கிறது’‘கார் நாற்பது கிலோ மீட்டர் வேகத்துக்கும் கீழே சென்றுகொண்டிருந்தது’‘பாடகரின் குரல் கீழே போகும்போது அபஸ்வரம் தட்டியது’
இடைச்சொல்
- 1காண்க: கீழ்