தமிழ் கவனம் யின் அர்த்தம்

கவனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

  ‘அவர் சொல்வதைக் கவனத்துடன் கேள்’
  ‘படம் வரைவதில் கவனம் செலுத்த முடியவில்லை’

 • 2

  (தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி) விழிப்போடு இருக்கும் நிலை; ஜாக்கிரதை.

  ‘என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது; நீ கவனமாக இரு!’
  ‘அவரிடம் பேசும்போது சொந்த விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்துவிடுகிறேன்’

 • 3

  (குறிப்பிட்ட சூழலில் ஒன்றைப் பற்றிய) நினைவு.

  ‘இது புராணம். வரலாறு இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்’

 • 4

  அக்கறை.

  ‘நூல் வெளிவர அவர் விசேஷக் கவனம் எடுத்துக்கொண்டார்’

 • 5

  (ஒன்று) பரிசீலனைக்கு அல்லது பார்வைக்கு உட்படும் நிலை.

  ‘இது என் கவனத்திற்கு வரவே இல்லை’
  ‘இந்தக் கோயிலிலுள்ள பல சிற்பங்கள் கவனத்துக்கு உரியவை ஆகும்’
  ‘பிரச்சினையை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்றார்கள்’
  ‘இந்தப் படத்தில் அவரது நடிப்பு உரிய கவனத்தைப் பெறாமல் போய்விட்டது’