தமிழ் கவனிப்பு யின் அர்த்தம்

கவனிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் ஒன்றின் மேல் செலுத்தும்) கவனம்.

  ‘உங்கள் பையனுக்குப் பாடத்தில் சரியான கவனிப்பு இருப்பதில்லை’

 • 2

  (ஒருவர் தன்னுடைய செயலால் பிறரிடமிருந்து பெறும்) மதிப்பு; கவனம்.

  ‘அந்தக் கவிதைத் தொகுப்பு அவனை இலக்கிய உலகில் பலருடைய கவனிப்பிற்கு உரியவனாக மாற்றியது’

 • 3

  உபசரிப்பு; உபசாரம்.

  ‘கல்யாணத்தில் கவனிப்பு பலமாக இருந்தது’