தமிழ் கவர் யின் அர்த்தம்

கவர்

வினைச்சொல்கவர, கவர்ந்து

 • 1

  (குறிப்பிடத் தக்க தன்மை, அம்சம் காரணமாக) கவனத்தை ஈர்த்தல்.

  ‘அவளுடைய பேச்சும் பணிவும் அவனைக் கவர்ந்தன’
  ‘கொடைக்கானலின் குளுமை உல்லாசப் பயணிகளைக் கவர்வதில் வியப்பில்லை’
  ‘சிறுதொழில் செய்பவர்களைக் கவரும் விதத்தில் தமிழக அரசு பல சலுகைகளை அறிவித்திருக்கிறது’

 • 2

  உயர் வழக்கு (ஒன்றை) முறையற்ற வழியில் தன் வசமாக்கிக்கொள்ளுதல்.

  ‘வெண்ணெயைக் கவர்ந்து உண்ணும் கண்ணனின் ஓவியம்’
  ‘இந்தியாவின் செல்வங்கள் அந்நியப் படையெடுப்புகளின்போது ஏராளமாகக் கவர்ந்து செல்லப்பட்டன’
  ‘திடீர்ப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கவர்ந்து சர்வாதிகாரியானார் அவர்’
  உரு வழக்கு ‘உள்ளம் கவர் கள்வன்’

 • 3

  (காந்தம், சாதனங்கள் போன்றவை) ஈர்த்தல்.

  ‘காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று கவரும்’
  ‘ஒலிவாங்கிகள் மிகக் குறைந்த சத்தத்தையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டவை’