தமிழ் கவர்ச்சி யின் அர்த்தம்

கவர்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கவனத்தை ஈர்க்கும் தன்மை.

  ‘இப்போது விற்பனைப் பொருள்களுக்குக் கவர்ச்சியாக விளம்பரம் செய்கிறார்கள்’
  ‘அவருக்கே உரிய கவர்ச்சியான நடையில் எழுதப்பட்ட கதை’

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) பாலுணர்வைத் தூண்டும் முறையிலானது.

  ‘கவர்ச்சி நடனம்’
  ‘விற்பனையைப் பெருக்குவதற்காகப் பத்திரிகைகள் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைப் பிரசுரிக்கின்றன’

 • 3

  கவரும் அழகு.

  ‘கண்கள்தான் அவளுக்கு ஒரு தனிக் கவர்ச்சியைத் தந்தன’
  ‘உனக்கு இந்த உடை கவர்ச்சியாக இருக்கிறது’

 • 4

  (ஒன்றின் அல்லது ஒருவரின் மேல் உள்ள) ஈர்ப்பு.

  ‘இசையில் அவருக்கு அப்படி ஒரு கவர்ச்சி’
  ‘அந்தப் பெண் மேல் கொண்ட கவர்ச்சியின் காரணமாக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்’

 • 5

  இயற்பியல்
  பிறவற்றைக் கவர்ந்து இழுக்கக்கூடிய வகையில் ஒரு பொருளில் இருக்கும் விசை; ஈர்ப்பு விசை.

  ‘எதிரெதிர் துருவங்களுக்கு இடையில் ஏற்படும் கவர்ச்சி விசைதான் காந்த விசை’