கவலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கவலை1கவலை2கவலை3

கவலை1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும்) நிம்மதியின்மை; வருத்தம்.

  ‘குழந்தைக்கு ஒரு வாரமாகக் கடும் காய்ச்சல். கவலையாக இருக்கிறது’
  ‘அவருடைய மறைவு கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்’
  ‘அணு ஆயுதங்கள் பெருக்கத்தைக் குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்’

 • 2

  அக்கறை; பொறுப்பு.

  ‘வீட்டில் என்ன நடக்கிறது என்கிற கவலை உனக்கு உண்டா?’

 • 3

  (விரும்புவது அல்லது தேவைப்படுவது கிடைக்கவில்லை என்று) வருத்தப்பட வேண்டிய நிலை.

  ‘பசுமாடு வாங்கிவிட்டால் பாலுக்குக் கவலை இல்லை’

கவலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கவலை1கவலை2கவலை3

கவலை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு

  காண்க: கமலை

கவலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கவலை1கவலை2கவலை3

கவலை3

பெயர்ச்சொல்

 • 1

  சாளை மீன்.