தமிழ் கவாத்து செய் யின் அர்த்தம்

கவாத்து செய்

வினைச்சொல்செய்ய, செய்து

  • 1

    (தாவரம் நன்றாக வளருவதற்காக) கிளை, தழை போன்றவற்றைக் கழித்து ஒழுங்குபடுத்துதல்.

    ‘மரத்தின் நடுப் பகுதியிலும் அதன் கிளைகளிலும் சூரிய ஒளியும் காற்றோட்டமும் இருக்கும் வகையில் கவாத்து செய்ய வேண்டும்’
    ‘அந்தப் பூங்காவில் புதர்களையும் செடிகளையும் பல வடிவங்களில் கவாத்து செய்திருந்தார்கள்’