கவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கவி1கவி2

கவி1

வினைச்சொல்கவிய, கவிந்து

 • 1

  (இருள், மேகம் முதலியவை குடை விரிவதுபோல்) கீழ்முகமாக இறங்குதல்; பரவுதல்.

  ‘அந்தி மயங்கி இருள் கவியும் நேரம்’
  ‘பனி மூட்டம் எங்கும் கவிந்திருந்தது’
  உரு வழக்கு ‘மனத்தில் ஏக்கம் கவிந்தது’

 • 2

  (மரம் குடை விரித்ததுபோல்) கிளை பரப்புதல்.

  ‘சாலையின் இரு புறமும் பல வகை மரங்கள் கவிந்து நின்றன’

கவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கவி1கவி2

கவி2

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு கவிதை; செய்யுள்.

  ‘அவர் நினைத்த மாத்திரத்தில் கவி பாட வல்லவர்’

 • 2

  கவிஞர்.

  ‘மகா கவி’