தமிழ் கவிழ் யின் அர்த்தம்

கவிழ்

வினைச்சொல்கவிழ, கவிழ்ந்து, கவிழ்க்க, கவிழ்த்து

 • 1

  (பாத்திரங்கள், பொருள்கள் இயல்பான நிலையிலிருந்து மாறி) கீழ்நோக்கிச் சாய்தல்; சரிதல்.

  ‘பூனை தாவி ஓடியதில் பானை கவிழ்ந்து உருண்டது’
  ‘நேற்று அடித்த காற்றில் தகரக் கொட்டகை கவிழ்ந்துவிடும் போலிருந்தது’

 • 2

  (கப்பல், ரயில் முதலிய வாகனங்கள்) சாய்ந்து விழுதல்.

  ‘பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டதில் சிலர் படுகாயமடைந்தனர்’
  ‘பனி மூட்டத்தில் பெரிய கப்பலுடன் மோதியதில் சிறிய கப்பல் கவிழ்ந்தது’

 • 3

  (ஒருவருடைய தலை) கீழ் நோக்குதல்.

  ‘மேஜைமேல் இருந்த புத்தகத்தில் தலை கவிழ்ந்து படித்துக்கொண்டிருந்தான்’
  ‘வெட்கத்தால் அவன் தலை கவிழ்ந்தான்’

 • 4

  (அரசு, ஆட்சி) அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்படுதல்.

  ‘கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்படும் மோதல்களால் ஆட்சி கவிழலாம்’

தமிழ் கவிழ் யின் அர்த்தம்

கவிழ்

வினைச்சொல்கவிழ, கவிழ்ந்து, கவிழ்க்க, கவிழ்த்து

 • 1

  (பாத்திரம், பெட்டி, கூடை போன்றவற்றை) தலைகீழாக வைத்தல் அல்லது விளிம்பு தரையைத் தொடுமாறு கீழ்நோக்கிச் சாய்த்தல்.

  ‘ஜாடியின் மூடியைக் காணவில்லை. இப்போதைக்கு இந்தச் சட்டியை அதன்மேல் கவிழ்த்து வை’
  ‘கூடையைக் கவிழ்த்துப் போட்டு அதன்மேல் உட்கார்ந்தான்’
  ‘கழுவிய பாத்திரங்களைக் கவிழ்த்து வை; தண்ணீர் வடியட்டும்’
  ‘புத்தகத்தைக் கவிழ்த்து வைக்காதே’

 • 2

  (புகைவண்டியை) தடம்புரளச் செய்தல்; (கப்பலை) மூழ்கடித்தல்.

  ‘பாலத்தில் வெடி வைத்துப் புகைவண்டியைக் கவிழ்க்கச் சதி!’

 • 3

  (ஓர் அரசை, ஆட்சியை) அதிகாரத்திலிருந்து இறக்குதல்; நீக்குதல்.

  ‘எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதிசெய்கின்றன என்று அமைச்சர் குற்றம்சாட்டினார்’
  ‘ராணுவத்தின் துணையுடன் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அவர் தானே நாட்டின் சர்வாதிகாரி ஆனார்’

 • 4

  ஒருவருடைய முன்னேற்றத்தைத் தடுத்து நிலைகுலையச் செய்தல்.

  ‘அவன் தன்னைக் கவிழ்க்க சதி செய்கிறானோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது’

 • 5

  (தலையை) கீழ் நோக்கச் செய்தல்; குனிதல்.

  ‘தலையைக் கவிழ்த்துக்கொண்டு நிற்பதிலிருந்தே குற்றம் செய்தது நீதான் என்று தெரிகிறது’