தமிழ் கஷ்டம் யின் அர்த்தம்

கஷ்டம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும்) திண்டாட்டம்; சிரமம்.

  ‘தண்ணீர் இல்லாமல் என்ன கஷ்டம் தெரியுமா?’
  ‘இந்த வேலையின் கஷ்டம் எனக்குத் தெரியும்’

 • 2

  (உடலையும் மனத்தையும் வருத்தும்) வருத்தம்; துன்பம்.

  ‘மக்களுடைய கஷ்டங்கள்’
  ‘என்னுடைய கஷ்டங்களை யாரிடம் சொல்வது?’

 • 3

  எளிதாக இல்லாதது; கடினம்; அரிது.

  ‘கஷ்டமான பாடம்’
  ‘இந்த மருந்து இங்கு கிடைப்பது கஷ்டம்’