கா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கா1கா2

கா1

வினைச்சொல்காக்க, காத்து

 • 1

  பாதுகாத்தல்.

  ‘அரசனைக் காக்க மெய்க்காப்பாளர்கள் இருந்தனர்’
  ‘மண்வளம் தாவரங்களால் காக்கப்படுகிறது’
  ‘உயிர் காக்கும் மருந்து’
  ‘நாய் வீட்டைக் காக்கும்’

 • 2

  உயர் வழக்கு கடைப்பிடித்தல்; அனுஷ்டித்தல்.

  ‘நூலகத்தில் அமைதி காக்க வேண்டும்’
  ‘அவர் சத்தியத்தைக் காக்கத் தவறிவிட்டார்’

கா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கா1கா2

கா2

வினைச்சொல்காக்க, காத்து

 • 1

  (துணைவினைகள் ஏற்று மட்டுமே வரும்போது) (ஒன்று வரும் அல்லது ஒருவர் வருவார் என்றோ ஒரு செயல் நிகழும் என்றோ) எதிர்பார்த்துப் பொறுத்திருத்தல்.

  ‘என்னை நீண்ட நேரம் காக்கவைத்துவிட்டாய்’
  ‘இன்னும் எத்தனை நாள்தான் காத்துக் கிடக்க வேண்டும்?’
  ‘அப்பா பொம்மை வாங்கி வருவார் என்ற நம்பிக்கையுடன் குழந்தை காத்து நிற்கும்’
  ‘நண்பர் வரும்வரை வங்கியில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது’
  ‘அவன் பேசி முடிக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்’
  ‘குழந்தை தூங்கும்வரை காத்திருந்துவிட்டு சினிமாவுக்குப் புறப்பட்டார்கள்’

 • 2

  (பணியை ஏற்றுச் செய்ய) தயார் நிலையில் இருத்தல்.

  ‘நீங்கள் இட்ட வேலையைச் செய்யக் காத்துக்கிடக்கிறோம்’