தமிழ் காசாக்கு யின் அர்த்தம்

காசாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சுய ஆதாயத்தையே குறியாகக் கொண்டு எதையும்) விற்று அல்லது பயன்படுத்திப் பணம் சேர்த்தல்.

    ‘அந்த நடிகையின் தந்தை தன் மகளின் புகழைக் காசாக்குவதில் குறியாக இருக்கிறார்’
    ‘அவன் மண்ணையும் காசாக்கிவிடுவான்’