தமிழ் காசு யின் அர்த்தம்

காசு

பெயர்ச்சொல்

 • 1

  நாணயம்.

  ‘குனிந்தபோது பையிலிருந்து காசுகள் கீழே விழுந்தன’
  ‘சோழர் காலச் செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன’

 • 2

  ரூபாயில் நூற்றில் ஒரு பங்கு; பைசா.

  ‘ஐம்பது காசுக்கு ஒரு மிட்டாய் வாங்கினான்’

 • 3

  பணம்.

  ‘காசு இருந்தால்தான் நாலுபேர் நம்மை மதிப்பார்கள்’

 • 4

  காசுமாலையில் நாணய வடிவில் இருக்கும் தகடு.