தமிழ் காட்சி யின் அர்த்தம்

காட்சி

பெயர்ச்சொல்

 • 1

  கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்.

  ‘அவன் மனைவி புலம்பி அழும் காட்சியைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது’
  ‘அந்த இயற்கைக் காட்சி அவன் மனத்தைக் கவர்ந்தது’

 • 2

  (நாடகத்தில் அல்லது திரைப்படத்தில்) ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம்.

  ‘நாடகத்தில் கடைசிக் காட்சியை மட்டும் திருத்தி எழுதினேன்’

 • 3

  (திரைப்படம் அல்லது நாடகம்) ஒரு நாளில் காட்டப்படுவதில் அல்லது நடத்தப்படுவதில் ஒரு தடவை.

  ‘திரையரங்கங்களில் பெரும்பாலும் நான்கு காட்சிகள் உண்டு’

 • 4

  (‘காட்சிக்கு’ என்ற வடிவத்தில் மட்டும்) (கண்காட்சி போன்றவற்றில் கலைப் பொருட்களோ வியாபாரப் பொருட்களோ பார்வையாளர்) பார்ப்பதற்காக.

  ‘அவரது ஓவியங்கள் பல்வேறு நாடுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன’
  ‘அந்த அரங்கில் கதர் ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன’