தமிழ் காட்டம் யின் அர்த்தம்

காட்டம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (கேட்பவருக்கு உறைக்கும் வகையில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்.

  ‘‘யாரைக் கேட்டு இந்தக் காரியத்தைச் செய்தாய்’ என்று அவர் காட்டமாகக் கேட்டார்’

 • 2

  பேச்சு வழக்கு (மது, காரமான உணவு ஆகியவற்றின்) கடும் சுவை அல்லது நெடி.

  ‘இந்தச் சுருட்டு நல்ல காட்டமாக இருக்கிறது’
  ‘மிளகாய்ச் சட்னியின் காட்டம்’