தமிழ் காட்டிக்கொடு யின் அர்த்தம்

காட்டிக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

 • 1

  (தேடப்படும் நபரையோ அவர் இருக்கும் இடத்தையோ) வஞ்சகமாகத் தெரிவித்தல்.

  ‘உயிருக்குப் பயந்து அந்த ரௌடியை யாரும் காவல்துறையினரிடம் காட்டிக்கொடுக்கவில்லை’
  ‘நம்மோடு இருந்துகொண்டே அவன் நம்மைக் காட்டிக்கொடுப்பான் என்று எதிர்பார்க்கவில்லை’
  ‘கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் தந்தையை மகனே காட்டிக்கொடுத்தான்’

 • 2

  (சோதனை முறையைக் கையாண்டு ஒன்றை) வெளிப்படுத்துதல்.

  ‘அந்த விமானப் பயணியின் கைப்பையில் ஒரு கத்தி இருந்ததை மின்கருவி காட்டிக்கொடுத்துவிட்டது’

 • 3

  (சொல்லாமல் மறைப்பதை மற்றொன்று) வெளிக்காட்டுதல்.

  ‘அவனது கைகால் நடுக்கமே அவன்தான் குற்றவாளி என்பதைக் காட்டிக்கொடுத்துவிட்டது’
  ‘அவர் பேசிய தோரணையும், நடந்துகொண்ட விதமுமே அவர் காவல்துறை அதிகாரி என்பதைக் காட்டிக்கொடுத்தன’