காடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காடி1காடி2

காடி1

பெயர்ச்சொல்

 • 1

  வட்டார வழக்கு (பழைய சோற்றில் நீர் ஊற்றி ஒரு சில நாட்கள் வைத்திருந்து பெறும்) புளித்த நீர்.

 • 2

  (பழங்கள், தானியங்கள், சர்க்கரை போன்றவற்றை) புளிக்கவைத்து எடுக்கப்படும், உணவுப் பண்டங்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும், அமிலத் தன்மை கொண்ட ஒரு திரவம்.

காடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காடி1காடி2

காடி2

பெயர்ச்சொல்

 • 1

  மரம், உலோகம் போன்றவற்றால் ஆன பொருள்களில் மற்றொன்றைப் பொருத்துவதற்காக ஏற்படுத்தும் சற்றுப் பள்ளமான வெட்டுப் பாதை.

  ‘காடி சரியாக இல்லாததால் மேஜையினுள் இழுப்பறை சரியாகப் பொருந்துவதில்லை’

 • 2

  வட்டார வழக்கு மாட்டுக் கொட்டில்.

  ‘காடிக்குப் போய்க் காளைகளை அவிழ்த்துத் தண்ணீர்காட்டிவிட்டுக் கூளம் போட்டுவிட்டுத் திரும்பினான்’