தமிழ் காடு யின் அர்த்தம்

காடு

பெயர்ச்சொல்

 • 1

  மரங்களும் செடிகளும் இயற்கையாக அடர்ந்து வளர்ந்துள்ள (விலங்குகளின் உறைவிடமாகிய) பரப்பு; வனம்.

 • 2

  புதர் மண்டிக்கிடக்கும் திருத்தப்படாத நிலம்.

  ‘இப்போது திரையரங்கு கட்டியுள்ள இடம் முன்பு வெறும் காடாகத்தான் இருந்தது’

 • 3

  வட்டார வழக்கு தோட்டம்; புன்செய் நிலம்.

  ‘உழுவதற்காக மாடுகளைக் காட்டுக்கு ஓட்டிக்கொண்டு போனான்’
  ‘காட்டில் கடலை எடுக்க அனைவரும் போய்விட்டார்கள்’