தமிழ் காணப்படு யின் அர்த்தம்

காணப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்று ஒரு இடத்தில் அல்லது ஒரு சூழலில்) கண்ணுக்குப் புலப்படும் வகையில் அல்லது உணரப்படும் வகையில் இருத்தல்.

    ‘கொலைசெய்யப்பட்டவன் உடலில் கத்திக் குத்து காணப்பட்டது’
    ‘இந்தக் கட்டுரை முழுவதிலும் தேவையற்ற கோபமே காணப்படுகிறது’
    ‘இந்த வகை மீன் பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் காணப்படும்’