தமிழ் காணாமல் போ யின் அர்த்தம்

காணாமல் போ

வினைச்சொல்போக, போய்

 • 1

  (ஒன்று அல்லது ஒருவர்) தொலைந்து போதல்.

  ‘காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு’
  ‘சட்டைப் பையில் வைத்திருந்த பேனா காணாமல் போய்விட்டது’

 • 2

  (பிரபலமாக இருந்த ஒருவர் அல்லது ஒன்று) இருக்கும் இடம் தெரியாமல் போதல்/முற்றிலும் மறக்கப்பட்டுவிட்ட நிலையை அடைதல்.

  ‘வெகு சீக்கிரம் முன்னேறிய பல கலைஞர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்’
  ‘நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பல பெரிய நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன’