தமிழ் காணி யின் அர்த்தம்
காணி
பெயர்ச்சொல்
- 1
நூறு குழி அல்லது 133 சென்ட் கொண்ட நில அளவு.
‘அவனுக்குச் சொந்தமாகப் பத்துக் காணி நிலம் இருக்கிறது’ - 2
இலங்கைத் தமிழ் வழக்கு (பொதுவாக) நிலம்/(குறிப்பாக) நன்செய்.
‘வீட்டுக் காணி’‘வயல் காணி’‘அவனுக்குச் சீதனமாகப் பத்து ஏக்கர் காணி கொடுத்தார்கள்’ - 3
இலங்கைத் தமிழ் வழக்கு தோப்பு.
‘பனங்காணிக்குள் கவனமாகப் போக வேண்டும்’