தமிழ் காணிக்கை யின் அர்த்தம்

காணிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  (தெய்வத்துக்கு அல்லது மகான்களுக்கு) பக்தி அல்லது மரியாதையின் அடையாளமாகச் செலுத்தும் பணம் அல்லது பொருள்.

  ‘கோயில் உண்டியலில் இந்தப் பணத்தை என் காணிக்கையாகப் போட்டுவிடு!’
  ‘திருப்பதியில் பக்தர்கள் தங்கள் முடியைக் காணிக்கை கொடுக்கிறார்கள்’

 • 2

  (தாம் எழுதிய நூல், தம் உழைப்பு முதலியவற்றை) நன்றியின் அடையாளமாக மரியாதைக்குப் பாத்திரமானவர்களுக்குப் படைப்பது; சமர்ப்பணம்.

  ‘நம் ஆசிரியருக்கு இந்தச் சிறு நூல் நம் அன்புக் காணிக்கை’