தமிழ் காதில் போட்டுக்கொள் யின் அர்த்தம்

காதில் போட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) கேட்டு உரிய கவனம் செலுத்துதல்.

    ‘நான் வீடு மாற்ற வேண்டும் என்று சொல்வதை நீங்கள் காதில் போட்டுக்கொள்வதேயில்லை’
    ‘தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் செயல்படுவதாக அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது’