தமிழ் காதுகுத்து யின் அர்த்தம்

காதுகுத்து

வினைச்சொல்-குத்த, -குத்தி

 • 1

  காது மடலின் கீழ்ப் பகுதியில் துளையிடுதல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்.

  ‘குழந்தைக்குக் காதுகுத்தக் கோயிலுக்குப் போயிருக்கிறார்கள்’

 • 2

  ஒன்றைப் பற்றித் தெரிந்தவரிடம் அது அவருக்குத் தெரியாது என்ற எண்ணத்தில் அதற்கு மாறான செய்தியைச் சொல்லுதல்.

  ‘நான் இப்போதுதான் அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன். அவர் ஊருக்குப் போய்விட்டார் என்று என்னிடமே காதுகுத்துகிறாயா?’

தமிழ் காதுகுத்து யின் அர்த்தம்

காதுகுத்து

பெயர்ச்சொல்

 • 1

  காதினுள் ஏற்படும் வலி.

 • 2

  காதுகுத்துதல் என்னும் சடங்கு.

  ‘என் குழந்தைக்கு நாளை காதுகுத்து’