தமிழ் காதுகொடுத்துக் கேள் யின் அர்த்தம்

காதுகொடுத்துக் கேள்

வினைச்சொல்கேட்க, கேட்டு

  • 1

    கவனத்துடன் கேட்டல்.

    ‘நான் சொல்வதைச் சிறிது நேரம் காதுகொடுத்துக் கேள்!’
    ‘அந்த இனிய வீணை இசையைச் சிறிது நேரம் காதுகொடுத்துக் கேட்டார்’