தமிழ் காதைக் கடி யின் அர்த்தம்

காதைக் கடி

வினைச்சொல்கடிக்க, கடித்து

  • 1

    (பிறர் உடனிருக்கும்போது நெருங்கி வந்து) செய்தியைப் பிறருக்குக் கேட்காத வகையில் சொல்லுதல்; கிசுகிசுத்தல்.

    ‘பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது என் செயலர் ‘அவசரப்பட்டு ஒத்துக்கொண்டு விடாதீர்கள்’ என்று என் காதைக் கடித்தார்’