தமிழ் காந்தல் யின் அர்த்தம்

காந்தல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உப்புமா, பொங்கல் போன்ற உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும்போது பாத்திரத்தின் அடிப்பாகத்தில்) தீய்ந்துபோய்க் காணப்படும் உணவுப் பகுதி.

    ‘உப்புமாக் காந்தலுக்குத் தனிச் சுவை உண்டு’
    ‘இருப்புச்சட்டியின் அடியில் இருந்த காந்தலைச் சுரண்டிக் கழுவினாள்’

  • 2

    பேச்சு வழக்கு (சூரிய வெப்பத்தினால் உடம்பிலும், மருந்து முதலியவற்றால் புண்ணிலும் ஏற்படும்) எரிவது போன்ற உணர்வு; எரிச்சல்.