தமிழ் காப்பாற்று யின் அர்த்தம்

காப்பாற்று

வினைச்சொல்காப்பாற்ற, காப்பாற்றி

 • 1

  (ஆபத்து, அழிவு போன்றவற்றிலிருந்து) பாதுகாத்தல்; தீங்கு, அழிவு வராமல் தடுத்தல்.

  ‘எரிந்துகொண்டிருந்த வீட்டிற்குள் தீயணைப்புப் படையினர் புகுந்து அங்கிருந்த முதியவரைக் காப்பாற்றினர்’
  ‘ஓர் உயிரைக் காப்பாற்ற இந்த மருந்து தேவை’
  ‘நம் கலைச் செல்வங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

 • 2

  (வாக்குறுதி, மரியாதை போன்றவற்றை) நிறைவேற்றுதல் அல்லது கைவிடாமல் கடைப்பிடித்தல்.

  ‘உனக்குக் கொடுத்த வாக்கை நான் காப்பாற்றிவிட்டேன்’
  ‘உன் மதிப்புமரியாதையைக் காப்பாற்றிக்கொள்!’
  ‘நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியாதவன் கடன் வாங்கக் கூடாது’

 • 3

  (வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்து) கவனித்துக்கொள்ளுதல்.

  ‘பிள்ளைகள் பிற்காலத்தில் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்?’
  ‘யார் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று இந்த நகரத்திற்கு வந்தாய்?’