தமிழ் காப்பியடி யின் அர்த்தம்

காப்பியடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

 • 1

  (தேர்வில்) விதிக்குப் புறம்பாக (புத்தகம் முதலியவற்றை) பார்த்து விடை எழுதுதல்.

  ‘காப்பியடித்துப் பிடிபட்டால் மூன்றாண்டுகள் தேர்வு எழுத முடியாது’

 • 2

  (ஒன்றில் இருப்பதை அல்லது ஒருவர் செய்யும் செயலைப் பார்த்து) அப்படியே செய்தல்.

  ‘தலைமுடியை வாருவதில்கூட என்னைப் பார்த்துக் காப்பியடிக்க வேண்டுமா, என்ன?’

 • 3

  பிறர் எழுதியதிலிருந்து எடுத்துத் தான் எழுதியதுபோலக் காட்டிக்கொள்ளுதல்.

  ‘என் நண்பர் தென்அமெரிக்க எழுத்தாளர் ஒருவரைக் காப்பியடித்து எழுதியிருந்ததை எளிதில் பார்க்க முடிந்தது’