தமிழ் காப்புரிமை யின் அர்த்தம்

காப்புரிமை

பெயர்ச்சொல்

  • 1

    (கண்டுபிடித்த ஒரு பொருளுக்கு அல்லது அதற்குச் சூட்டிய பெயருக்குத் தான்தான் உரிமையாளர் என்று) அரசில் பதிவு செய்து பெறும் உரிமை.

    ‘இந்தியாவில் மரபுரீதியாகத் தயாரிக்கப்படும் சில பொருள்களுக்குச் சில வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை கோருகின்றன’

  • 2

    ஒரு படைப்பாளிக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்குத் தன் படைப்பில் சட்டபூர்வமாக இருக்கும் உரிமை.

    ‘இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு எழுத்தாளர் இறந்து அறுபது ஆண்டுகள்வரை அவர் எழுதிய நூல்களின் காப்புரிமை அவருடைய வாரிசுகளின் உடைமையாக இருக்கும்’