தமிழ் காப்பு யின் அர்த்தம்

காப்பு

பெயர்ச்சொல்

 • 1

  கையில் அணியும், இறுக்கமாக இல்லாத, பட்டையான, வளையலைப் போன்ற (தங்க அல்லது வெள்ளி) அணிகலன்.

  ‘நான்கு பவுனில் இரண்டு காப்புகள் செய்துகொண்டாள்’

 • 2

  (ஈயம், இரும்பு, செம்பு போன்றவற்றால் ஆன) நோய்த் தடுப்புக்காகக் காலில் அணியும் வளையம்.

  ‘காக்காய்வலிப்புக்கு உள்ளானவரின் காலில் இரும்புக் காப்பு’

 • 3

  (குறிப்பாகத் திருமணம் முதலிய சடங்குகளில்) தீய சக்திகளிலிருந்து காக்க மணமகன் மற்றும் மணமகள் கையில் கட்டும் மஞ்சள் கயிறு.

 • 4

  (தண்ணீர் முதலியவை அரிக்காதிருக்கும் வகையில் அல்லது மின்சாரம் முதலியவை வெளியே பரவாத வகையில்) ரசாயனப் பூச்சு அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆன உறை.

 • 5

  (முற்காலத்தில்) நூல் இயற்றும்போது அந்தப் பணி சிறப்பாக நிறைவேற வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளும் வகையில் எழுதப்படும் முதல் பாடல்.

  ‘விநாயகர் காப்புடன் அபிராமி அந்தாதி தொடங்குகிறது’