தமிழ் காம்பு யின் அர்த்தம்

காம்பு

பெயர்ச்சொல்

 • 1

  (தாவரங்களில் இலை, பூ, காய் ஆகியவற்றைக் கிளை, கொடி போன்ற பகுதிகளோடு) இணைத்துத் தாங்கும் மெல்லிய தண்டுப் பகுதி.

  ‘பூவைக் காம்போடு பறித்தான்’
  ‘வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிந்து விட்டுச் சுண்ணாம்பு தடவினார்’

 • 2

  (பசுவின் மடி, பெண்களின் மார்பகம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) பால் வெளிவரும் துவாரமுள்ள பகுதி/ஆணின் மார்பில் சிறியதாக, மேற்குறிப்பிட்டதைப் போல இருக்கும் பகுதி.

தமிழ் காம்பு யின் அர்த்தம்

காம்பு

பெயர்ச்சொல்

 • 1

  (கோடாலி, விசிறி முதலியவற்றில்) மரக் கைப்பிடி.