தமிழ் காய்ச்சு யின் அர்த்தம்

காய்ச்சு

வினைச்சொல்காய்ச்ச, காய்ச்சி

 • 1

  (நீர், பால் முதலியவற்றை) கொதிக்கும் அளவுக்குச் சுடவைத்தல்.

  ‘நீரை நன்றாகக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்கவும்’
  ‘அம்மா எண்ணெய் காய்ச்சிக்கொண்டிருந்தாள்’

 • 2

  (உணவுப் பொருள்களையோ மருந்துப் பொருள்களையோ நீரில் கலந்து அல்லது ஒன்றின் சாற்றைக் கொதிக்கவைத்து ஒன்றை) தயாரித்தல்.

  ‘வெல்லம் காய்ச்சும் தொழில்’
  ‘கஞ்சி காய்ச்சிக் குடித்தாள்’
  ‘கள்ளச் சாராயம் காய்ச்சியவர்கள் கைது’

 • 3

  (இரும்பு, ஈயம் போன்ற உலோகத்தை அல்லது வெண்ணெயை) இளகவைத்தல்.

  ‘அவன் பேச்சு ஈயத்தைக் காய்ச்சிக் காதில் ஊற்றியதுபோலிருந்தது’
  ‘வெண்ணெய் காய்ச்சும் வாசனை’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு சமைத்தல்.

  ‘செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நாங்கள் மச்சம் காய்ச்சுவதில்லை’
  ‘உனக்குக் கருப்பனிக் கூழ் காய்ச்சத் தெரியுமா?’
  ‘கறி காய்ச்சிவிட்டுதான் சொதி வைக்க வேண்டும்’
  ‘அம்மா சோறு காய்ச்சுகிறாள்’