தமிழ் காயம் யின் அர்த்தம்

காயம்

பெயர்ச்சொல்

 • 1

  (கீழே விழுதல், வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால்) இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற பாதிப்பு.

  ‘கல் தடுக்கிக் கீழே விழுந்ததில் முழங்கையில் காயம் ஏற்பட்டது’
  ‘ஈராக் போரில் ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்தனர்’
  ‘விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்’
  உரு வழக்கு ‘என் மனத்தில் ஏற்பட்ட காயம் ஆறவேயில்லை’

தமிழ் காயம் யின் அர்த்தம்

காயம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு உடம்பு.

  ‘மனம், வாக்கு, காயம் சுத்தமாக இருக்க வேண்டும்’

தமிழ் காயம் யின் அர்த்தம்

காயம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு