காய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காய்1காய்2காய்3காய்4

காய்1

வினைச்சொல்காய, காய்ந்து, காய்க்க, காய்த்து

 • 1

  (உலர்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (வெப்பத்தால்) ஈரத்தன்மை இல்லாமல் ஆதல்

   ‘மழை இல்லாமல் நிலமெல்லாம் காய்ந்துகிடக்கிறது’
   ‘ஈரத் துணிகளைக் காயப்போடு!’

  2. 1.2 (புண், காயம் முதலியன) ஆறுதல்; குணமாதல்

   ‘புண் நன்றாகக் காய்ந்து பொருக்குப் படர்ந்திருக்கிறது’

  3. 1.3 (தொண்டையில்) வறட்சி உண்டாதல்

   ‘பேசிப்பேசித் தொண்டை காய்ந்துவிட்டது’

  4. 1.4 (ஒருவருக்கு) அதிக அளவில் பசித்தல்

   ‘வயிறு காய்ந்தால் தானாகச் சாப்பிட வருவான்’

 • 2

  (சூடாதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (பொருள்) சூடேறுதல்

   ‘அடுப்பில் பாகு காய்கிறது’
   ‘அடுப்பில் சட்டி காய்கிறது’
   ‘பழுக்கக் காய்ந்த இரும்புக் கம்பி’

  2. 2.2 (காய்ச்சலால் உடல்) சுடுதல்

   ‘குழந்தைக்கு இரண்டு நாளாக உடம்பு காய்கிறது’

 • 3

  (ஒளி வீசுதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (நிலா, சூரியன் ஆகியவை) பிரகாசமாக ஒளி வீசுதல்

   ‘நிலவு காயும் நாட்களில் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்’
   ‘ஒரு வார மழைக்குப் பிறகு இன்று நன்றாக வெயில் காய்கிறது’

காய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காய்1காய்2காய்3காய்4

காய்2

வினைச்சொல்காய, காய்ந்து, காய்க்க, காய்த்து

 • 1

  (மரம், செடி, கொடி முதலியன) காய் தருதல்.

  ‘மாமரம் இன்னும் காய்க்கத் தொடங்கவில்லையா?’

காய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காய்1காய்2காய்3காய்4

காய்3

வினைச்சொல்காய, காய்ந்து, காய்க்க, காய்த்து

 • 1

  (கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவதால் உள்ளங்கையிலும் அல்லது ஒரே இடத்தில் பட்டுப்பட்டுக் கால், முட்டி போன்ற உடல் பகுதிகளிலும்) தோல் தடித்தல்.

  ‘கோடாலி பிடித்து அடிக்கடி விறகு வெட்டுவதால் என் கையில் தோல் காய்த்துப்போய்விட்டது’

காய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

காய்1காய்2காய்3காய்4

காய்4

பெயர்ச்சொல்

 • 1

  பழமாவதற்கு முன் உள்ள நிலையிலிருக்கும், தாவரத்தின் பாகம்.

  ‘மாமரத்தில் முற்றிய காயை மட்டும் பறியுங்கள்’
  ‘பலாக் காய்’

 • 2

  (சமையலுக்கான) காய்கறி/காய்கறிகளின் நறுக்கிய துண்டு.

  ‘உப்பும் மிளகாய்ப் பொடியும் போட்டுக் காய் வேகும்வரை கொதிக்கவைக்கவும்’
  ‘காய் இல்லாமல் வெறும் குழம்பு ஊற்று’

 • 3

  விரை.

 • 4

  (சதுரங்கம், தாயம் முதலிய விளையாட்டுகளில்) கட்டங்களில் நகர்த்தப்படுவது.

 • 5

  (சிறுவர்களிடையே) (ஒருவரோடு ஒருவர்) பேசாத நிலை.

  ‘உன்னோடு காய்!’