தமிழ் காரணம் யின் அர்த்தம்

காரணம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு விளைவைத் தோற்றுவிப்பது; விளைவுக்கு ஆதாரமாக இருப்பது.

  ‘அவளுடைய பரபரப்புக்கான காரணம் தெரியவில்லை’
  ‘அப்பா உன்னை அடித்ததற்குக் காரணம் நீ சரியாகப் படிக்காததுதான்’
  ‘கவனக் குறைவின் காரணமாக இது நடந்துவிட்டது’

 • 2

  ஒரு செயலுக்குத் தரப்படும் விளக்கம்.

  ‘நேற்று வராததற்கு என்னென்னவோ காரணங்கள் கூறுகிறான்’

 • 3

  நோக்கம்.

  ‘காரணம் இல்லாமல் அங்கு போகக் கூடாது’