தமிழ் காரணி யின் அர்த்தம்

காரணி

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு செயல் நிகழ அல்லது ஒன்று உருவாகக் காரணமாக அமைவது.

  ‘ஆரோக்கியம் அற்ற சூழல், பொருளாதார நெருக்கடி முதலியவை ஒருவருக்கு மனநோய் ஏற்படக் காரணிகளாக அமையலாம்’

 • 2

  கணிதம்
  ஒரு பெரிய எண்ணை மீதி இல்லாமல் வகுக்கும் (ஒன்று என்னும் எண் தவிர்த்த) எண்களில் ஒன்று.

  ‘2, 4, 5, 10 ஆகியவை இருபதின் காரணிகள்’