தமிழ் காரம் யின் அர்த்தம்

காரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உறைப்பு.

  ‘குழம்பில் காரம் அதிகம்’
  ‘காரமான சட்னி’

 • 2

  எண்ணெயில் செய்யப்பட்ட உறைப்புச் சுவை உடைய தின்பண்டம்.

  ‘இனிப்புக்கு லட்டும் காரத்துக்குப் பக்கோடாவும் வாங்கினார்’

 • 3

  (பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படும்) கடுமை.

  ‘எதிர்க்கட்சியினரைக் காரமாகத் தாக்கிப் பேசினார்’

 • 4

  வேதியியல்
  அமிலத்துடன் சேரும்போது உப்பை உண்டாக்கும் வழுவழுப்புத் தன்மை கொண்ட பொருள்.

  ‘கார உலோகங்கள்’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு சக்தி வாய்ந்த மருந்து.

  ‘காரமான குளிசைகளைக் கொடுத்தும் நோய் மாறவில்லை’
  ‘இந்தச் சிறிய நோய்க்கு இவ்வளவு காரமான மருந்துகளைச் சாப்பிடக் கூடாது’