தமிழ் காரியம் யின் அர்த்தம்

காரியம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஒருவர் செய்கிற அல்லது செய்ய வேண்டிய) வேலை அல்லது செயல்.

  ‘எந்த ஒரு காரியத்தையும் கருத்துடன் செய்!’
  ‘நீ செய்வது சட்டவிரோதமான காரியம்’
  ‘ஊருக்குப் போனதும் முதல் காரியமாக அவரைச் சந்திக்க வேண்டும்’

 • 2

  கருமாதி.

  ‘தாத்தாவின் காரியத்திற்காவது அவன் வந்திருக்கலாம்’