தமிழ் காற்றாடி யின் அர்த்தம்

காற்றாடி

பெயர்ச்சொல்

 • 1

  மிக மெல்லிய மூங்கில் பிளாச்சால் ஆன சட்டத்தின் மீது துணி அல்லது காகிதம் ஒட்டப்பட்டு, வால் போன்ற நீளமான பகுதி சேர்க்கப்பட்டு, நூலின் மூலமாகக் காற்றில் பறக்க விடப்படும் ஒரு விளையாட்டுப் பொருள்; பட்டம்.

  ‘தந்திக் கம்பத்தில் காற்றாடி சிக்கிக்கொண்டது’

 • 2

  நறுக்கிய இரு ஓலைத் துண்டுகளை ஒன்றன் மீது ஒன்றைக் குறுக்காக வைத்து அதன் நடுப்பகுதியில் முள் போன்றவற்றால் குத்தி ஒரு குச்சியுடன் இணைத்து அல்லது இதுபோலவே காகிதத்தில் செய்து காற்றில் சுழலவிடும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

 • 3

  பேச்சு வழக்கு மின்விசிறி.