தமிழ் காற்று யின் அர்த்தம்

காற்று

பெயர்ச்சொல்

 • 1

  உலகில் உள்ள உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிக்கும், பூமியைச் சுற்றி நிறைந்திருக்கும், கண்ணுக்குப் புலப்படாத வாயுப் பொருள்.

  ‘மழையினால் காற்றில் ஈரப்பதம் கூடியிருக்கிறது’
  ‘மழையுடன் பலத்த காற்றும் இன்று வீசக்கூடும்’
  ‘சைக்கிளுக்குக் காற்று அடித்தாயா?’

 • 2

  (ஒன்றின் அல்லது ஒருவரின்) தாக்கம்.

  ‘உன் மாமா சீட்டுப் பைத்தியம். அவர் காற்று உனக்கும் அடித்துவிட்டதா?’
  ‘மேலைநாட்டு நாகரிகத்தின் காற்று இந்தியாவிலும் எப்போதோ வீசத் தொடங்கிவிட்டது’