தமிழ் காலணி யின் அர்த்தம்

காலணி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நடக்கும்போது காலுக்குப் பாதுகாப்பாகப் பாதத்தில் அணியும் செருப்பு முதலியவை.

  ‘ஏழைகளுக்கு இலவசமாகக் காலணிகள் வழங்கப்பட்டன’
  ‘கல்யாண மண்டபத்தின் வாசலில் பல விதமான காலணிகள் கிடந்தன’

 • 2

  உயர் வழக்கு (பெண்கள்) காலில் அணியும் சலங்கை முதலிய அணிகள்.

  ‘சிலம்பு என்னும் காலணியை வைத்து ஒரு காப்பியம்’