தமிழ் காலனி யின் அர்த்தம்

காலனி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு நகரத்தில்) பொருளாதார ரீதியில் ஒரே நிலையில் உள்ளவர்கள் அல்லது ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி.

  ‘எங்கள் காலனியில் 1200 சதுர அடிக்குக் குறைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் இல்லை’
  ‘வங்கி அதிகாரிகள் காலனி’
  ‘பஞ்சாலைத் தொழிலாளர் காலனி’

 • 2

  கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் மக்கள் வசிக்கும் பகுதி.

  ‘ஊர்ப் பொதுக் கிணற்றிலிருந்து காலனி மக்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?’